Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் இன்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், நாளையும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை சுரைக்காற்றும் பல பகுதிகளில் வீசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளையும் (மே 3ம்) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், சில இடங்களில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வுமைய தகவல்கள் கூறப்படுகிறது.
மணிக்கு முப்பது கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இயல்பை விட அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும் என்றும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையானது 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.