Karunas : சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் - அடுத்து நடந்தது என்ன?

By Ansgar R  |  First Published Jun 2, 2024, 5:40 PM IST

Actor Karunas : பிரபல நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 1970ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி என்கின்ற இடத்தில் பிறந்தவர் தான் பிரபல நடிகர் கருணாஸ். கடந்த 2001ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "நந்தா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக களம் இறங்கினார். அன்று தொடங்கி இன்றுவரை மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழோடு பயணித்து வருகிறார். 

அதேபோல சூர்யாவின் "ஸ்ரீ" திரைப்படத்தில் ஒழித்த "மதுர ஜில்லா" என்கின்ற பாடல் தொடங்கி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "கடவுள் இருக்கான் குமாரு" என்கின்ற படத்தில் ஒலித்த "லோக்கலிட்டி பாய்ஸ்" என்கின்ற பாடல் வரை பல பாடல்களை பாடி இருக்கிறார். கருணாஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். 

Tap to resize

Latest Videos

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை: துரை வைகோ!

தற்பொழுது முக்குலத்தோர் புலிப்படை என்கின்ற கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இன்று சென்னையில் இருந்து திருச்சி செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பொழுது அவரிடம் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டது. 

அப்பொழுது அவருடைய கைப்பையில் சுமார் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரிடம் தற்பொழுது விசாரணை நடந்துவரும் நிலையில் அவர் தொடர்ந்து விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னையிலிருந்து திருச்சி புறப்படவிருந்த அந்த விமானம் சுமார் 30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தன்னிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசன்ஸ் இருப்பதாகவும், இந்த தோட்டாக்கள் அந்த துப்பாக்கியினுடைய தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் விமான நிலையத்திற்குள் தோட்டாக்களை கொண்டு வரக்கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மறதியாக அதை எடுத்து வந்ததாகவும் கருணாஸ் கூறியுள்ள நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Kamal : "இந்தியன் 2.. கைகொடுத்த உதயநிதி.. இப்பொது நான் செய்வது கைமாறு" - Audio Launchல் மனம் திறந்த கமல்!

click me!