மருத்துவ கவுன்சிலிங்: 400 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் தமிழ்நாடு?

Published : Aug 03, 2023, 10:24 AM IST
மருத்துவ கவுன்சிலிங்: 400 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் தமிழ்நாடு?

சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் 400 எம்பிபிஎஸ் இடங்களை இழக்க வாய்ப்புள்ளது

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை திரும்பப் பெற்றதால், இரண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 400 எம்பிபிஎஸ் இடங்களை தமிழகம் இழக்க வாய்ப்புள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கில் மாணவர்கள் விருப்பத்தை தேர்வு செய்து இறுதி செய்வதற்கு சில சில மணிநேரங்களுக்கு முன்பு, என்எம்சியிடம் இருந்து அங்கீகாரம் பெறாததால் காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள 250 இடங்கள் நீக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் கவுன்சிலிங் கமிட்டி கடந்த மாதம் 27ஆம் தேதி அறிவித்தது.

அதேபோல், MBBS/BDS இடங்களுக்கான சேர்க்கைக்கான 1ஆவது சுற்று கவுன்சிலிங்கின் முடிவுகளை கமிட்டி அறிவித்து, திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கல்லூரிக்கு 65 மாணவர் இடங்களை ஒதுக்கியது. ஆனால், அந்த நிறுவனத்தில் 2023-24 கல்வியாண்டிற்கான 100 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

அந்த கல்லூரிக்கு கல்லூரிக்கு 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 100 இடங்களைப் புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 100 எம்பிபிஎஸ் இடங்களுக்குப் பதிலாக கவனக்குறைவாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் புதுப்பிக்கப்பட்டன. எனவே, 2023-2024 கல்வியாண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் நிறுத்தப்பட்டதாக தேசிய மருத்துவ ஆணையம் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு: அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஆனால், கல்லூரியில் சேர்க்கையை நிறுத்துவதற்கு எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் இல்லை தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து வரவில்லை என்று கவுன்சிலிங் ஹெல்ப்லைனைக் கையாளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நாங்கள் NMC இலிருந்து பெறும் உள்ளீடுகளின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒதுக்குகிறோம். ரவுண்ட் 1 ஒதுக்கீடு முடிந்தது. மேலும் தெளிவு தேவைப்பட்டால், மருத்துவ ஆலோசனைக் குழு மற்றும் கல்லூரியில் நேரடியாகச் சரிபார்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதேபோல், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் “தொழில்நுட்பப் பிழை” என்ற செய்தி இருப்பதால் மாணவர்களை தொடர்ந்து சேர்க்கிறோம் என்று கல்லூரியின் சேர்க்கை பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரிகளில் சேர்வதற்கான கட்டணம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 4 கடைசித் தேதியாகும். இதனால், அக்கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர். “நாங்கள் கல்லூரியில் சேர்ந்த பின், அவர்கள் எங்களது சேர்க்கையை அங்கீகரிக்கவில்லை என்றால், நாங்கள் கட்டணமாக செலுத்தும் ரூ.25 லட்சம் என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. சேர்க்கை அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அடுத்த சுற்றுகளில் எங்களுக்கு இடம் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளன.” என்று வேல்ஸ் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள மாணவரின் தந்தையான மூத்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!