Latest Videos

Rain : எங்க போனாலும் குடை முக்கியம்.. தமிழகத்தில் 7 நாளுக்கு மழை இருக்கு.. மீனவர்கள் ஜாக்கிரதை - நியூ அப்டேட்!

By Ansgar RFirst Published Jun 27, 2024, 11:56 PM IST
Highlights

Tamil Nadu Rain Update : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ள அதே நேரம், பரவலாக பல இடங்களில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகின்றது. 

மேற்கு திசை நோக்கி வீசுகின்ற காற்றின் வேகமானது மாறுபட்டுள்ளதால் தமிழகத்தில் தற்பொழுது பல இடங்களில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் எதிர்வரும் 7 நாள்களுக்கு இந்த மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருக்கிறது. இன்று ஜூன் மாதம் 27ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. 

அதேபோல எதிர்வரும் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல ஜூன் மாதம் 30ம் தேதி, ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய்யின் த.வெ.க கல்வி விருது விழாவில் வித விதமான நா ருசிக்க மதிய உணவுப்பட்டியல்!!

மேலும் எதிர்வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை, மன்னார்வளைகுடா மற்றும் அதை ஒட்டி உள்ள தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில், மணிக்கு 35 முதல் 42 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புகள் இருப்பதால், மீனவர்கள் கவனத்தோடு செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக ஜூன் 30ம் தேதி வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளோரம் 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுகள் வீச அதிக வாய்ப்புகள் இருப்பதால், மீனவர்கள் கவனத்துடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் கடலில் சீற்றும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய இடங்களை தவிர்க்குமாறும் மீனவர்களுக்கு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தவிர எதிர்வரும் 7 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில், பல இடங்களில் மிதமான மழை மாலை நேரத்தில் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முறையாக அனுமதி பெறாத 33 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து; புதுவை அரசு அதிரடி

click me!