கனமழை எதிரொலி... ரெட் அலர்ட்டை தெறிக்கவிட வரும் மீட்புக் குழு!

By vinoth kumarFirst Published Oct 5, 2018, 5:37 PM IST
Highlights

தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வரும் 7-ஆம் தேதி அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வரும் 7-ஆம் தேதி அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது ஆங்காங்கு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. 

இந்த நிலையில் மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்... குறிப்பாக வரும் 7 ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி தலைமையில் இன்றும் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், எந்தெந்த மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் அமைப்பு அனுப்பப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அந்த அடிப்படையில் நீலகிரி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 1 குழுக்களும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் குழு தேவைப்படும் பட்சத்தில் அந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிகிறது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

click me!