காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம். எடையார்பாக்கம் கிராமத்தில் 147.11 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தகத்துறை வெளியிட்டுள்ளது.
இரண்டாவது விமான நிலையம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வளர்ச்சியின் காரணமாக விமான நிலையம் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையில் இருக்கும் நிலையில் தற்போது சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5368 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிலம் கையகப்படுத்த அனுமதி
இந்நிலையில் அரசு நிலம் நீர்நிலைகளை தவிர்த்து மக்கள் குடியிருப்புகள் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய் துறை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் விற்பதற்கான சிறப்பு வருவாய்த்துறை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எடையார்பாக்கம் கிராமத்தில் 147.11 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தகத்துறை வெளியிட்டுள்ளது. 59 எக்டேர் நிலங்களை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
30 நாட்களுக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
இந்த நிலம் குறித்த பாத்தியத்தை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மண்டலம் 2 பிளாட் 59 75 ரோஜாம்பாள் சுப்பிரமணிய முதலியார் நகர் காரை கிராமம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலம் எடுப்பு தொடர்பாக எந்த ஒரு ஆட்சேபணையோ அல்லது கோரிக்கையோ 30 நாட்களுக்குள் புதிய பசுமை வெளி விமான நிலைய திட்ட மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதன் பின் அனுப்பும் விண்ணப்பதாரர் மனு நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.