CBI: சிபிஐக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து - அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு !!

Published : Jun 14, 2023, 08:40 PM ISTUpdated : Jun 14, 2023, 10:20 PM IST
CBI: சிபிஐக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து - அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு !!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., எந்த மாநிலங்களில் விசாரணை நடத்துவதாக இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என 1946 டில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1989,1992ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற ஆணையிடப்பட்டுள்ளது.

இனி புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற ஆணையை மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?

பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
Tamil News Live today 26 December 2025: இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு! பயணிகள் எவ்வளவு கூடுதலாக செலுத்த வேண்டும்?