புதிய ஆட்சியர்கள் நியமனம்.. 12 IAS அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு - முழு விவரம்!

By Ansgar RFirst Published Jan 27, 2024, 11:58 PM IST
Highlights

IAS Officers Transfer : தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக ஒரு சில ஆண்டுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசு பணியிட மாற்றம் செய்வது வழக்கமானது தான். இந்நிலையில் 12 IAS  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தென்காசி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் தற்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பாஸ்கர பாண்டியன் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Latest Videos

வீட்டில் தனியாக இருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளை; அரவகுறிச்சியில் பரபரப்பு

சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக ஆர் பிரிந்தா தேவி அவர்களும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் அவர்களும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் அவர்களும், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல வேலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த மாற்றங்களை தவிர ஏற்கனவே திருவண்ணாமலை ஆட்சியராக பணிபுரிந்து வந்த முருகேஷ் தற்பொழுது வேளாண் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குனராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணை செயலாளராகவும் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன்: விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

click me!