ஸ்பெயினில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன்: விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

By SG Balan  |  First Published Jan 27, 2024, 9:52 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், "முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புகிறேன்." என்று கூறினார்.


தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க எட்டு நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அண்மையில் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு துபாய் புறப்பட்டு செல்கிறார்.

Tap to resize

Latest Videos

இரவு 9.45 மணிக்குப் புறப்படும் விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் செல்லும் முதல்வர், அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார். பின், ஸ்வீடனில் இருந்து ஸ்பெயினுக்குச் செல்ல உள்ளார். ஸ்பெயின் நாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

இந்நிலையில், ஸ்பெயின் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், "முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புகிறேன்." என்று கூறினார்.

"அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற்றது. 2030க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்கு. ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடு செய்ய தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை எடுத்துரைக்க இருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டார்.

கடந்த முறை துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்றும் கடந்த ஆண்டு மேற்கொண்ட சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் ரூ.1,345 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்றும் முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

முதல் முறையாக நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா!

click me!