
India Pakistan war : பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது. பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் மேற்கொள்ளும் வகையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏகவுனை சோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நாள் போர் ஒத்திகை நிகழ்வானது நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,
இதன் படி, நாளை நடைபெறும் போர் ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று காலை 10.45 மணியளவில் சிவில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் ஓத்திகை-ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சிவில் பாதுகாப்புத் துறையின் தலைவர்கள் இணையவுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரநிலை முகாம்கள் அமைப்பது, போர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, உணவு சேமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலகத்திலிருந்து உள்துறை செயலாளர். பொதுத்துறை செயலாளர். காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் போது போர் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.