தங்கத்தை பரிசளித்து தாயின் கனவை நனவாக்கிய பிரபல யூடியூபர்! குவியும் பாராட்டு!

Published : May 06, 2025, 07:20 AM IST
தங்கத்தை பரிசளித்து தாயின் கனவை நனவாக்கிய பிரபல யூடியூபர்! குவியும் பாராட்டு!

சுருக்கம்

தமிழ்நாட்டின் பிரபல யூடியூபர் சுரேஷ் குமரன் தன்னுடைய அம்மாவுக்கு தங்கத்தை பரிசளித்துள்ளார். அவரை நெட்டிசன்கள் பாராட்டினார்கள்.

Tamilnadu YouTube Gifts Mother: இன்றைய நவீன உலகில் சோஷியல் மீடியாக்கள் எனப்படும் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்கள் வாயிலாக சிலர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான யூடியூபர்கள் கல்வி, விளையாட்டு, மருத்துவம், பயணம் தொடர்பான தகவலை அளித்தும், இசை, நடனம் என திறமைகளை வெளிப்படுத்தியும் மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

பிரபல யூடியூபர் சுரேஷ் குமரன்

அந்த வகையில் யூடியூபர் சுரேஷ் குமரன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். பிளாக்கி ஸ்டார் சுரேஷ் குமரன் (Blacky Star Suresh Kumaran) என்று அழைக்கப்படும் இவர் SURESH KUMARAN P.Kஎன்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சுரேஷ் குமரன் தனது யூடியூப் சேனலில் வித்தியாசமாக நடனமாடி மக்களை மகிழ்வித்து வருகிறார். விதவிதமாக டான்ஸ் மேற்கொண்டு அதை யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார் சுரேஷ் குமரன். இவரது நடனத் திறமையை பார்த்து ரசிக்க ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆசிரியர் சுரேஷ் குமரன்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் குமரனை பொறுத்தவரை பொழுது போக்கிற்காக மட்டுமே விதவிதமான டான்ஸ் ஸ்டெப்களை மேற்கொண்டு யூடியூப்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். ஆனால் ஆசிரியரான அவர் யூடியூப் வாயிலாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணிதம், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை முழு நேர வேலையாக வைத்துள்ளார்.

அம்மாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்த யூ டியூபர் சுரேஷ் குமரன்

தனது டான்ஸ் மூலம் மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி ஒரு ஆசிரியராக பாடம் நடத்தி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறார் சுரேஷ் குமரன். இந்நிலையில், யூ டியூபர் சுரேஷ் குமரன் யூ டியூப் வாயிலாக சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன்னுடைய அம்மாவுக்கு தங்க வளையல் மற்றும் தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்துள்ளார். பணக்காரர்களின் ஆபரமான தங்கம் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. 

யூடியூபருக்கு குவியும் பாராட்டு 

சுரேஷ் குமரனின் குடும்பமும் பொருளாதாரரீதியாக பின்தங்கியதுதான். இந்நிலையில் தான் தன்னுடைய தாய்க்கு தங்கத்தை வாங்கிக் கொடுத்து அவரது கனவை நனவாக்கியுள்ளார் சுரேஷ் குமரன். இவரின் நடனத்துக்கு பாசிவுட் ரிவூஸ்களை விட நெகடிவ் ரிவூஸ்களே அதிகம் வரும். ஆனாலும் அந்த நெகடிவ்  ரிவூஸ்களை தன்னுடைய பாசிடிவ் ஆக எடுத்துக் கொண்டு மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி மாணவர்களுக்கும் பயனுற வகையில் செயல்பட்டு வருகிறார் இந்த டான்ஸ் மன்னன். தாயின் கனவை நனவாக்கிய சுரேஷ் குமரனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!