முதுகலை மருத்து படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்வு

By Ajmal Khan  |  First Published Jan 12, 2024, 12:59 PM IST

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


மருத்துவ முதுகலை படிப்பு

எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிக்க விரும்புகின்றனர். அந்தவகையில் முதுகலையில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதுகலையில் Non service முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டு காலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

விதிகளை தளத்திய தமிழக அரசு

மேலும் முதுகலை படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் 40 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றி, 20 லட்சம் ரூபாய் கட்டினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இரண்டு ஆண்டுகள் என்பதை ஓர் ஆண்டாக குறைத்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுமா.? கிளாம்பாக்கமா.? விளக்கம் கொடுத்த போக்குவரத்து கழகம்

click me!