50க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published : Dec 29, 2024, 11:40 PM ISTUpdated : Dec 30, 2024, 01:42 AM IST
50க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சுருக்கம்

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 56 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 3 ஏடிஜிகளுக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது. அவர்கள் இப்போது டிஜிபியாக நியமனம் பெற்றுள்ளனர்.

ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமனும் அதே பொறுப்பில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடேவுக்கும் டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

முஸ்லிம்கள் புத்தாண்டு கொண்டாடக் கூடாது! பத்வா அறிவித்த அகில இந்திய ஜமாத்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண் குமார் ஐ.பி.எஸ் பதவி உயர்வு பெற்று, திருச்சி சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்தார். விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்தவர்.

சரவணசுந்தர் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை (வடக்கு) துணை ஆணையராக தேவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!