அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகர், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகர் என்பவர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் ஆதாரத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால், திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என திமுக தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு ஆதாரத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறையா? முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்!
இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர் துணை முதல்வர், அமைச்சருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. நாங்களும் திருமணத்திற்கு செல்கிறோம் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் அப்படி என்றால் அவர்களடன் எங்களுக்கும் தொடர்பு என அர்த்தமா? யாருடன் யார் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பொருந்தாத வாதம் என நீதிபதிகள் கூறினர்.
இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எத்தனை பொது விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
இந்நிலையில் அண்ணாமலை திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஞானசேகர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?