காவல்துறை மரியாதையோடு வாணி ஜெயராமுக்கு இறுதி அஞ்சலி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Feb 5, 2023, 12:40 PM IST
Highlights

பிரபல பின்னனி பாடகி வாணி ஜெயராம் மறைவையொட்டி காவல்துறை மரியாதையோடு இறுதி நிகழ்வு நடத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

வாணி ஜெயராமுக்கு மறைவுக்கு அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 78. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். இந்தநிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று அவர் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்தநிலையில் வாணி ஜெயராம் இறுதி நிகழ்விற்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்திருந்தது, 

காவல்துறை மரியாதைக்கு உத்தரவு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக  விளங்கிய பின்னணிப் பாடகி திருமதி வாணிஜெயராம் அவர்கள் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  திருமதி வாணிஜெயராம் அவர்களின் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்தது எப்படி? - பிரேத பரிசோதனை மூலம் வெளிவந்த உண்மை

click me!