எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வேதனையளிக்கிறது.! துடி துடித்து போன முதலமைச்சர் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Feb 5, 2023, 10:39 AM IST
Highlights

பிரபல இயக்குனரும், நகைச்சுவை நருகருமான டி.பி.கஜேந்திரன் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் எனது கல்லூரித் தோழரும், இனிய நண்பர்,  டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டிபி கஜேந்திரன்

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிர் இழந்தார்.அவரது இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இயக்குனர் டிபி கஜேந்திரனும் கல்லூரி நண்பர்களாவர். இவர்கள் இருவரும் விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டி.பி.கஜேந்திரனை அடிக்கடி நேரில் சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்து வந்தார். இந்தநிலையில் அவரது இழப்பு முதலமைச்சரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி

                                           

நண்பரின் மறைவு வேதனை அளிக்கிறது

பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

இரங்கலை தெரிவித்த முதலமைச்சர்

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது டி.பி.கஜேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படியுங்கள்

நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.! உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தடை செய்திடுக..? தமிழக அரசுக்கு அன்புமணி அட்வைஸ்

click me!