துர்கா ஸ்டாலினின் சகோதரி திடீர் மரணம்..! முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

By Ajmal Khan  |  First Published Feb 5, 2023, 8:05 AM IST

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சாருமதி திடீர் மரணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரியான சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது வயது 62,  துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, ராஜமூர்த்தி என இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரர் உள்ளனர். தனது சகோதரர் மற்றும் சகோதரிகள் மீது துர்கா ஸ்டாலின் அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள கோயில்களுக்கு துர்கா ஸ்டாலின் செல்லும் போது தனது சகோதரியான சாருமதியையும் உடன் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Latest Videos

இன்று மாலை இறுதி சடங்கு

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த சாருமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சாருமதி உயிர் இழந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த துர்கா ஸ்டாலினை அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர். இதனையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள சாருமதியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கள ஆய்வில் முதல்வர் கேட்ட கேள்விகள்.. 24 மணி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள் - அதிரவைக்கும் பின்னணி

 

click me!