கூட்டுறவு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு!

By Manikanda Prabu  |  First Published Dec 1, 2023, 3:02 PM IST

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் சுமார் 3,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கையினை  பரிசீலனை செய்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கும் நோக்குடன், குழு ஒன்று அமைத்து, குழுவின் அறிக்கையினை பெற்று அதன் அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

Tap to resize

Latest Videos

தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், 30.09.2022 வரையிலான காலத்திற்கு நல்லெண்ண தொகையாக (Goodwill amount) நிரந்தர தொழிலாளி ஒருவருக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 மற்றும் பருவகால தொழிலாளிக்கு ரூ.,32,000 முதல் ரூ.40,000 வரையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், 01.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்கு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுத்துவரும் சூழ்நிலையில் அனைத்து தொழிலாளர்களும், பணியாளர்களும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வினை ஏற்று, அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேலும் இலாபகரமாக இயக்கிட தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!