கள் இறக்க தடை நீக்கப்படுமா.? சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Mar 25, 2025, 10:54 AM IST
கள் இறக்க தடை நீக்கப்படுமா.? சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு

சுருக்கம்

பனை மரங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். மேலும், கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றும் அவர் கூறினார்.

Toddy shop in tamilnadu : பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில்  நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்கப்படுமா என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அமைச்சர் பொன்முடி, 376 பனை வெல்லம் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், 8 மாவட்ட பனை வெல்லம் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். 

கள் இறக்க அனுமதி?

அதுபோல் நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, பனை கல்லுக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க அரசு முன்வருமாக என்று ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பனையிலிருந்து பதனீர் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பபனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார் என்று தெரிவித்தார். 

வழக்கு போடுவதை கட்டுப்படுத்தனும்

இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கல்லுனு வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்குபோடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி
ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!