Polling day : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... சம்பளத்துடன் பணியாளர்களுக்கு விடுப்பு-தமிழக அரசு அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Apr 24, 2024, 11:26 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க தொலைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது 

வாக்குப்பதிவு- தொழிலாளர்களுக்கு விடுப்பு

இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளாவில் வருகின்ற 26 ஆம் தேதியும், ஆந்திர பிரதேசத்தில் அடுத்த மாதம் 13ம் தேதியும்,  கர்நாடகாவில் வருகின்ற 26 முதல் கட்டமாகவும் அடுத்த மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் அங்கு வாக்களிக்க செல்லும் வகையில் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள். 

சம்பளத்துடன் விடுப்பு

உணவு நிறுவனங்கள். மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும்  கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி/தற்காலிக/ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள்தம் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951. 135(B)-ன் கீழ் அந்தந்த தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மேற்கண்ட தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் கர்நாடகா. கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுரிமை உள்ள தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் சென்னை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு விடுமுறை அளிக்காத்து தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Kalakshetra : தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.!!கலாஷேத்திரா மாணவி புகார் -மாஜி பேராசிரியரை தட்டித்துக்கிய போலீஸ்
 

click me!