சில்லறை பிரச்சனை.. டிக்கெட்டை பயணி முகத்தில் விட்டெறிந்த அரசு பேருந்து நடத்துனர் - வைரல் வீடியோ!

By Ansgar R  |  First Published Aug 5, 2023, 10:21 PM IST

பேருந்து டிக்கெட்டிற்கு, கேட்ட சில்லறை இல்லை என்று கூறியதற்காக, பெண் பயணியின் முகத்தில் டிக்கெட்டை வீசி எறிந்துள்ளார் ஒரு அரசு பேருந்து நடத்துனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேனி மாவட்டம் போடி கிளையைச் சேர்ந்த அரசு பேருந்து இன்று காலை, போடியில் இருந்து பழனி வழியாக கோவை உக்கடம் பேருந்து நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பெண் பயணி ஒருவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்டு உள்ளார். 

அப்பொழுது அந்தப் பெண் பயணியிடம் டிக்கெட்டுக்கு தேவையான சில்லறை பணம் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண் பயணி தன்னிடம் சில்லறை இல்லை என கூறியதற்கு, ஆத்திரமடைந்த அந்த பேருந்து நடத்துனர், அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

Latest Videos

மேலும் தரக் குறைவாகவும், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் இறுதியில் அந்த பெண்ணின் முகத்தில் டிக்கெட்டை வீசி எறிந்துள்ளார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனின் இந்த நிகழ்வுகளை பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்து பயணத்தில் கணிசமான லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில், பயணிகளை கவரும் வகையில் அனைவர் இடத்திலும் மரியாதை உடன் பேசி பயணிகளை மகிழ்ச்சியுடன் கொண்டு சென்று சேர்க்கின்றனர். 

ஆனால் அரசு பேருந்துகளிலோ, மக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டிய அரசு ஊழியர்கள், அவர்களிடம் மிகக்கடுமையாக சில நேரங்களில் நடந்துகொள்வது, காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

பெள்ளி மற்றும் பொம்மனை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

click me!