Kumari Ananthan : தமிழிசையின் தந்தை குமரிஆனந்தனுக்கு தமிழக அரசு விருது.! முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Aug 1, 2024, 2:02 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலினால் விருது வழங்கப்படவுள்ளது. 
 


தகைசால் தமிழர் விருது

தமிழக அரசு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கி  வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தந்தைக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் உத்தரவிட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

 இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் திரு. சங்கரைய்யா அவர்கள், திரு.ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது. 

Mettur Dam Water : மேட்டூர் அணையின் நீர் மட்டம் என்ன தெரியுமா.? இத்தனை லட்சம் கன அடி நீர் வெளியேற்றமா.?

குமரி ஆனந்தனுக்கு விருது அறிவிப்பு

இந்த கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் திரு. குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

'தகைசால் தமிழர் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு, 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Annamalai : இந்த ஆண்டும் இதையே செய்தால் தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது- எச்சரிக்கும் அண்ணாமலை

click me!