மதுபான பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு..! மதுபானங்களின் விலை உயர்வு- வெளியான விலை பட்டியல்

Published : Jul 19, 2023, 02:22 PM ISTUpdated : Jul 19, 2023, 02:31 PM IST
மதுபான பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு..! மதுபானங்களின் விலை உயர்வு- வெளியான விலை பட்டியல்

சுருக்கம்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மது வருவாய் அதிகரிக்க திட்டம்

தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த வாரம் 500 கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் மது விற்பனை கடந்த 2003 ஆம் ஆண்டுகளில் 3,640 கோடியாக இருந்தது. தற்பொழுது படிப்படியாக மது விற்பனை அதிகரித்து மாத வருவாய் மட்டுமே 36 ஆயிரத்து 33 கோடியை எட்டி உள்ளது. இந்தநிலையில் மது வருவாய் மட்டுமே தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.

மதுபான விலை உயர்வு

தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும், வார இறுதி நாட்களில் 120 கோடி முதல் 150 கோடி ரூபாய் விற்பனையும், பண்டிகை நாட்களில் 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனையாகும். இந்தநிலையில் மது வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானத்தின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. அதன் படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்படுதவாகவும், ஒரு பாட்டில் பீருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுபானத்தின் விலை மீண்டும் அதிகரித்து இருப்பது மது பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

இதையும் படியுங்கள்

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: இதெல்லாம் வேலைக்கு ஆகாது - மதுப்பிரியர்கள் யோசனை!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தும் விஜய்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..