சமயபுரம் மாரியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.. தங்கத்தேர் இழுத்து வழிபாடு

By Ramya s  |  First Published Jul 19, 2023, 1:43 PM IST

திருச்சி சமயபுரம் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.


தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழக மற்றும் இன்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சாமி சமயபுரம் கோயிலில் தரிசனம் செய்தார். நேற்று காலையில், பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்தார். தங்கத் தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டது அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனை தொட்டு வணங்கினார் இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர்  கல்யாணி கோவில் பணியாளர்கள் அரசு அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

Latest Videos

undefined

 

Aadi Pooram Viratham : ஆடிப்பூரம் விரதம்; உங்களுக்கு விரைவில் டூம் டூம்...பிள்ளை வரம் கிடைக்கும்..!!

click me!