பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு அதிக நிதி வழங்கியபோதிலும் திட்டத்தின் பெயர் மத்திய அரசின் பெயரிலே செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விலையில்லா வீட்டு மனை பட்டா, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புக்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்? சிவகங்கையில் பரபரப்பு
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ வளர்ச்சிக் கழகத் தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் டாடா நகர் மற்றம் வேதாரண்யம், திருக்குவளை தாலுக்கா பகுதிகளைச் சேர்ந்த 957 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் தாட்கோ சார்பில் 5 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 1081 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் வழங்கினார்.
கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரம்; பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது - காவல்துறை விளக்கம்
விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசை விட அதிக அளவில் தமிழக அரசு நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் திட்டத்தின் பெயர் மத்திய அரசின் பெயரிலேயே செயல்படுவதாகவும் மத்திய அரசு தான் நிதியை வழங்காமலே போலியான விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கலைஞரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு முதலமைச்சர் அதிக கவனம் செலுத்துவதாகவும், இதில் குடிசை வீடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.