தமிழக அரசிடம் பஞ்சமி நிலங்கள் தொடர்பாக விளக்கம் கேட்கும் பட்டியலினத்தோர் ஆணையம்; சீமான் வரவேற்பு

Published : Mar 15, 2024, 06:35 PM IST
தமிழக அரசிடம் பஞ்சமி நிலங்கள் தொடர்பாக விளக்கம் கேட்கும் பட்டியலினத்தோர் ஆணையம்; சீமான் வரவேற்பு

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் தொடர்பான அறிக்கையை 15 நாட்களில் வெளியிட வேண்டும் என்ற தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் உத்தரவுக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக அடுக்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூகநீதி எனப் பேசி ஆட்சி அதிகாரத்தை அடைந்த, 56 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி, பெருமளவு பஞ்சமி நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்பட்டது.

6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்? சிவகங்கையில் பரபரப்பு

அவற்றை மீட்டுத்தரக்கோரிப் பல ஆண்டுகளாக ஆதித்தமிழ்க்குடி மக்கள் போராடி வரும் நிலையில், இன்று வரையில் அதற்கான எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. ஆட்சியாளர்களே பஞ்சமி நிலத்தை அபகரித்து உள்ளதால் அதனை மீட்டுத்தர திமுக அரசு மறுக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரம்; பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது - காவல்துறை விளக்கம்

ஆகவே, பஞ்சமி நிலங்களை விரைந்து மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!