கடல் கடந்து கெத்து காட்டிய தமிழக பெண்.. சர்வதேச விருதை தட்டித்தூக்கி அசத்தல்..!

Published : Dec 12, 2022, 08:27 AM ISTUpdated : Dec 12, 2022, 08:30 AM IST
கடல் கடந்து கெத்து காட்டிய தமிழக பெண்.. சர்வதேச விருதை தட்டித்தூக்கி அசத்தல்..!

சுருக்கம்

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு கேள்வி எழுந்திருக்கலாம். அதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. 

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி    (Ms.International World People's Choice Winner 2022) என்ற  பட்டம் வென்றுள்ளார். 

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கலாம். அதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. கோவையில் பிறந்த இவர் மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என இவருமைக்கு பல திறமைகள் உண்டு. 

இதையும் படிங்க;- கடினமான சமயங்களை எதிர்கொள்ளும் துணைக்கு உறுதுணையாக இருப்பது எப்படி..?

கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில்,  தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி  பங்கேற்றார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றுள்ளார். 14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க;- Blue Skin Man : ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய ஆசைப்பட்டு முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!