விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

Published : Dec 12, 2022, 08:07 AM ISTUpdated : Dec 12, 2022, 08:13 AM IST
விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

சுருக்கம்

வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது.

கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க;- அடுத்த 2 மணி நேரத்திற்கு.. 17 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கபோகுது.. வானிலை மையம் எச்சரிக்கை !

இந்நிலையில், தொடர்கனமழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 18 January 2026: 58% டிஏ உயர்வு மட்டும் போதுமா? 8வது ஊதியக் குழுவுக்கு முன்பே வரப்போகும் குட் நியூஸ்
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்