இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டோம்….தமிழக மீனவர்கள் கண்ணீர்…

 
Published : Mar 15, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டோம்….தமிழக மீனவர்கள் கண்ணீர்…

சுருக்கம்

tn fishermen release

இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டோம்….தமிழக மீனவர்கள் கண்ணீர்…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நேற்று தமிழகம் திரும்பிய மீனவர்கள், தாங்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

ராமேசுவரம், பாம்பன், நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 85 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 6-ந் தேதி தனுஷ்கோடியை அடுத்த ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசும் இப்பிரச்சனையில் இலங்கைக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தது.

இதனையடுத்து  பதற்றத்தை தணிக்கும் வகையில், நல்லெண்ண அடிப்படையில் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேரை விடுவிக்க இலங்கை அரசு முன்வந்தது. இதேபோன்று, தமிழக சிறையில் இருக்கும் 12 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு முடிவு செய்தது.



இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் கடந்த கடந்த சனிக்கிழமை  விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவரையும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நேற்று எடுக்கப்பட்டன. அதன்படி, 77 தமிழக மீனவர்கள் நேற்று காலை இலங்கை கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு இந்திய எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேநேரம் தமிழக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் காரைக்காலில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு, இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் 77 பேர் இந்திய கப்பலில் ஏற்றி காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் ஜெயகுமார், ஒ.எஸ். மணியன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள் இலங்கை சிறைகளில் தாங்கள் மிகவும் கொடுமைப்பட்டதாக தெரிவித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!