
தமிழகத்திற்கு எதிராக போராட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டது. அப்போது தமிழகத்திற்கு முதலில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இதனை மறுத்த கர்நாடக அரசு பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தண்ணீரை திறந்து விட்டது.
இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் மற்றும் பந்த் நடைபெறுகிறது. அப்போது தமிழகத்தை சேர்ந்தவர்களை அங்கு தாக்கப்படுவதாக வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் இரு மாநிலங்களுக்குள் பதற்றமான சூழ்நிலை உருவானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பொய்யான வீடியோ- டிஜிபி எச்சரிக்கை
இந்தநிலையில் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது; வட்டாள் நாகராஜை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!