மிரட்டும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு.. இன்றைய நிலவரம்..

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 


கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 57பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 53 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,500 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 310 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,165 ஆக உள்ளது. 

Latest Videos

click me!