மாணவர்கள் கவனத்திற்கு.. ! 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு.. வெளியான புது அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Apr 23, 2022, 2:54 PM IST
Highlights

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 

கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியானது.  12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறகிறது.  அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பொதுத்தேர்வு முடிவுகள் 10  ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதேபோல 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதி தேர்வு நடத்தபடவுள்ளது. 

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட்  நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது.  அதன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.இதனிடையே 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 யிலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் 20 மதிப்பெண்ணிற்கு மட்டுமே செய்முறை தேர்வுகளை எழுதுகின்றனர். எனவே செய்முறை தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று ஹால்- டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விவரம்..

click me!