அலர்ட்..! தென்தமிழகத்தில் இன்று அடித்து ஊற்ற போகும் மழை ..! வேறு எந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Apr 23, 2022, 2:23 PM IST
Highlights

தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்.” இலங்கை மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக,

23.04.2022: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.04.2022: தென்தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.04.2022, 26.04.2022. 27.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.அதிகபட்ச வெப்பறிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : 23.04.2022 - கேரள கடல்‌ பகுததியை ஒட்டிய தென்‌ தமிழ்நாடு - குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதுகளுக்கு செல்ல வேண்டாமெ  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

click me!