கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.? தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் முடிவு என்ன? அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்

Published : Apr 23, 2022, 01:21 PM IST
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.?  தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் முடிவு என்ன? அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்

சுருக்கம்

ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது ஒரு தந்தையாக மனவேதனையை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் இறுதி தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த 4 நாட்களில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்தநிலையில்,  சென்னை கிண்டியில்  இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு இணைந்து   இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார், 

தேர்வு எப்போது? 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவது தொடர்பாக, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வழங்கும் உத்தரவுகளை செயல்படுத்துவோம் என தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக தவறான செயல்களில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது அமைச்சராக மட்டுமில்லாமல், 2 குழந்தைகளின் தந்தையாக மன வேதனையை ஏற்படுவதாக தெரிவித்தார். கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம்  மன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்வது தங்களின் கடமை என கூறினார். அவர்களை நல்வழிப்படுத்த மாணவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.

போலி சான்றிதழ் கண்டுபிடிப்பு

பொதுவாக ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பள்ளி போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்படும் எனவும் இந்த முறை அஞ்சல் துறையில் மட்டும்  450 க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதிகமான போலி சான்றிதழ்கள் அஞ்சல் துறையில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் இதை  மாவட்ட அளவிலேயே எளிதாக கண்டுபிடிக்க முடியும் எனவும் அதை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
எதிர்காலங்களில் பள்ளி கல்வியை டிஜிட்டல் தொழில்நுட்ப வழியில் வழங்குவது குறித்து எந்த மாதிரியான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி பாடத் திட்டங்கள் மாற்றப்படும் எனவும் அடுத்துமுறை பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யும்போது டிஜிட்டல் தொழில்நுட்ப வழியில் கல்வி வழங்குவதை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை