மெரினாவில் கக்கனுக்கு சிலை வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

By Velmurugan sFirst Published Dec 23, 2022, 4:02 PM IST
Highlights

முன்னாள் தமிழக அமைச்சரும், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான கக்கன் அவர்களுக்கு மெரினாவில் சிலை அமைத்து ஆண்டு தோறும் அரசு சார்பில் விழா கொண்டாட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் அமைச்சரும் கட்சியின் முன்னாள் தலைவருமான கக்கன் அவர்களின் 41வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு முகத்தில் கூடு வைத்த தலைமை ஆசிரியர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஒரு அரசியல்வாதி எப்படி செயல்பட வேண்டும் என்று செயல்பட்டவர் கக்கன். அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக எளிமையாக செயல்பட்டு நாட்டு மக்களுக்கு சிறப்பான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியவர் என அவர் புகழாரம் சூட்டினார். மேலும்  எளிமையின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு கடைசி வரையில் உண்மையாக விசுவாசமாக இருந்தவர் என கக்கன் ஜி எனவும் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.

வேலியே பயிறை மேய்வதா? கோவையில் டிவி திருடிய போலீசை கண்டு மக்கள் அச்சம்

மேலும் காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கண்ணம்மா பேட்டையில் உள்ள கக்கன் நினைவிடம் வரை ஊர்வலமாக வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சன் குமார்: தூய்மையான அரசியல்வாதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன், எனவே கக்கனை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் பாடமாக சேர்க்க வேண்டும். கக்கனுக்கு மெரினா கடற்கரையில் சிலை அமைத்து ஆண்டுதோறும் அரசு சார்பில் விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

click me!