தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்வது நடைமுறையாகும். அதன்படி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அறிக்கையில் “தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2023ம் ஆண்டு ஜகவரி 31ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரில் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு முகத்தில் கூடு வைத்த தலைமை ஆசிரியர்
மேலும் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை இனையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது