அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

By Ajmal Khan  |  First Published Dec 23, 2022, 12:03 PM IST

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படவுள்ள நிலையில் விடுமறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 


பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்றுடன் தேர்வுகள் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பொதுத்தேர்வு எழுதவுள்ள  10.11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்காக சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் மட்டும் விடுமுறை அளித்துவிட்டு திங்கட் கிழமையில இருந்து பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக் கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின.  இதையடுத்து விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக இந்த செய்தியை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளனர். எனவே உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது. 

Tap to resize

Latest Videos

click me!