கொரோனா பாதித்த பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை? அமைச்சர் விளக்கம்

By Velmurugan sFirst Published Dec 23, 2022, 11:06 AM IST
Highlights

ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் வகை திரிபு கொரோனா வேகமாக பரவி வருகிறது. சீனாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 6 பேர் படுகாயம்.!

மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் மாநில அரசும் வெளிநாட்டு பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் தற்போது வரை புதிய கொரோனா கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். ஆனால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாணவர்களின் மன நலன் காக்கும் மனம் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

நாள்தோறும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.-பிசிஆர் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 அல்லது 7 என்ற ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

click me!