தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் விதியின் 110-ன் கீழ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அவர்களது தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 788 பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அதில்..
undefined
"நமது திராவிட மாடல் அரசின், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒப்பற்ற கொள்கையின்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் அவரவர் தொகுதிகள் சார்ந்து பெறப்பட்ட 10 கோரிக்கைகள், அந்தந்த மாவட்ட அளவிலான குழு, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு என அடுத்தடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இக்கூட்டத்தில், நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, இத்திட்டத்தின் கீழ் அரசுக்கு கோரிக்கையாக வந்த 1896 பணிகளில், 2023-24 ஆம் ஆண்டில், 234 சட்டமன்ற தொகுதிகளில், 788 பணிகளை ரூ.11,239 கோடி மதிப்பீட்டிலும், 2024-25ம் ஆண்டில் 203 பணிகளை ரூ.5,901 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்துவது என முடிவாகியுள்ளது.
இப்பணிகளை விரைந்து முடித்து, இவற்றின் முழுப்பயனையும் மக்களுக்கு கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.