கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தான் பற்றாக்குறை பூர்த்தி செய்திட இயலும் - முதல்வர் ஸ்டாலின்
டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி தற்போது தன்னுடைய முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று மாதத்திற்கு தேவையான தண்ணீர் தற்பொழுது மேட்டூர் அணையில் இல்லை என்ற செய்தி பலரையும் கவலையடைய வைத்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிற்கு தருவதற்கு தேவையான தண்ணீர் கர்நாடக மாநில அணைகளில் இருந்தும் கூட, அதை திறந்துவிட அம்மாநில அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று பல அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு அவசர கடிதத்தை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் குருவை சாகுபடி தடையின்றி மேற்கொள்ள காவிரியில் இருந்து உரிய நீரை திறந்து விட உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அந்த கடிதத்தை இன்று புதுதில்லியில் ஜல்சக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார். அந்த கடிதத்தில் பல முக்கிய தகவல்களை கூறிய முதல்வர் ஸ்டாலின், குறிப்பாக தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், இரண்டு அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும், இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.
I have written to Hon'ble requesting the release of water and highlighting the risks faced by the current Kuruvai crop in Tamil Nadu. Furthermore, I have urged immediate attention to this critical issue. pic.twitter.com/UribUwcqy5
— M.K.Stalin (@mkstalin)தற்போது மேட்டூர் அணையின் இருப்பு 20 நாட்களுக்கு பாசனத்திற்கு தேவைப்படும் அளவில் மட்டுமே உள்ளது என்றார் அவர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவநிலை குறைவாக இருப்பதால், குருவை சாகுபடி மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குருவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் நாளைக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அது 10,000மாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியை சமாளிக்க அனைத்து முயற்சியும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும். தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்துக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவில் இருந்து விடப்படும் தண்ணீரை கொண்டு தான் பற்றாக்குறை பூர்த்தி செய்திட இயலும் எனவும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இலங்கை விவகாரத்தில் திமுகவின் பொய் வேஷம்: அண்ணாமலை சாடல்!