Pongal 2022:பொங்கல் தினத்தையொட்டி இந்த கோரிக்கை நிறைவேற்றுங்கள்..கேரள முதலமைச்சருக்கு அவசர கடிதம்..

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 2:27 PM IST
Highlights

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தை மாதம் முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தான் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமில்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அநேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக பார்க்கப்படுகிறது. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளாக  தைப்பொங்கல் இருக்கிறது. நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். 

இந்நிலையில் நாளை தமிழர் திருநாளாம் பொங்கல்  திருநாள் உலகம் முழுவதும் கொண்டாப்படவுள்ள நிலையில் கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில் அவர், “தமிழ் பேசும் மக்கள் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு பொங்கலை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, கேரள அரசு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி புனிதமான தை தமிழ் மாதத்தி்ன் முதல் நாளாகும். ஆனால் இந்த வருடம், ஜன.15ம் தேதி இந்த 6 மாவட்டங்களிலும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே உலகம் முழுவதும் தமிழ்ச் சமூகங்களிடையே கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜன.14 ம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!