Corona: மக்களே உஷார்.. 2ம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்குமாம்.. பகீர் கிளப்பும் ராதாகிருஷ்ணன்

By vinoth kumar  |  First Published Jan 13, 2022, 2:06 PM IST

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 


சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் ஒமிக்ரானும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 18,000 நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7,300 தாண்டியுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

ஒமிக்ரான் பாதிப்பு மூக்கு, தொண்டையில் மட்டுமே ஏற்படுவதால் அலட்சியாக இருக்க வேண்டாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும். மக்கள் தாமாக முன்வந்து 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

click me!