Vaikunta Ekadasi: வைகுண்ட ஏகாதசி.. கோவிந்தா.. கோவிந்தா.. என கோ‌ஷங்களுடன் சொர்க்கவாசல் திறப்பு..!

By vinoth kumarFirst Published Jan 13, 2022, 6:37 AM IST
Highlights

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ ஆலயங்களில் நள்ளிரவு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வைக் காண வைணவ ஆலயங்களுக்கு ஏராளமான பக்தர்கள் ஏகாதசி விரதமிருந்து, கோயிலுக்கு வந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்து கண் விழித்து காத்திருந்து, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைக் கண்டு தரிசிப்பதுண்டு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ ஆலயங்களில் நள்ளிரவு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வைக் காண வைணவ ஆலயங்களுக்கு ஏராளமான பக்தர்கள் ஏகாதசி விரதமிருந்து, கோயிலுக்கு வந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்து கண் விழித்து காத்திருந்து, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைக் கண்டு தரிசிப்பதுண்டு.

தற்போது இந்தியாவில் 3வது அலையான ஒமிக்ரான் என்னும் புதிய வகை நோய்த் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. நோய்த் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தமிழக அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வழிபாட்டுத்தலங்களுக்கு வந்து செல்லவும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இந்நிலையில் நள்ளிரவில் முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் உள்ள வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயில்களில் அதிகாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

click me!