உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோ

By Ajmal Khan  |  First Published Jan 29, 2024, 1:08 PM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அவர் சென்ற விமானத்தில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா) பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் எடுத்த படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 


ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்

2030க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். இன்று ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்த விமானத்தில் செர்பியா நாட்டு டென்னிஸ் வீரர்  நோவக் ஜோகோவிச் பயணம் செய்துள்ளார். 

Surprise in the skies: Met legend en route to ! 🎾 pic.twitter.com/VoVr3hmk5b

— M.K.Stalin (@mkstalin)

Tap to resize

Latest Videos

நோவக் ஜோகோவிச் சந்தித்த ஸ்டாலின்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை 10முறை வென்றவரும். நடப்பு சாம்பியனும், உலகின் நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் ஆவர், இவர் தற்போது ஆஸி ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் முதல் தடவையாக அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாயிரத்து 195 நாட்களுக்குப் பிறகு அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.  இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆகாயத்தில் ஆச்சர்யம் என நோவக் ஜோகோவிச்சை விமான பயணத்தின் போது  சந்தித்த புகைப்படத்தை  பதிவு செய்துள்ளார். 

2ஆவது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியனான அரினா சபலெங்கா!

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயினில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள். மாநாட்டை முதலமைச்சர் நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் பற்றியும் தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

click me!