இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல.. சொல்லி அடித்த முதல்வர் மு.க ஸ்டாலின் - திமுக அரசின் இமாலய சாதனைகள் !

By Raghupati R  |  First Published Feb 28, 2023, 9:46 PM IST

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக அரசு அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் தலை சிறந்த ஆட்சியை தொடர்ந்து தந்து வருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் உலக அளவில் தலை நிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பணிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக இன்று வரை செய்து வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றவுடன் ‘திராவிட மாடல் சிந்தனையுடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட தொடங்கியது.

இலங்கை தமிழர்கள்

Latest Videos

இலங்கை தமிழர்கள் மீது தமிழக மக்களும், திமுகவும் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அனைவரும் அறிந்ததே. திமுக அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்காவும், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்காகவும் பல நற்பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்.

இனி அகதிகள் அல்ல

இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்று கூறி ஈழத்தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, உலக தமிழர்களின் நெஞ்சிலும் நீங்காத இடத்தை பெற்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சொல்லோடு நின்றுவிடாமல், செயலிலும் பல அதிரடி நடவடிக்கைகளை நிறைவேற்றினார்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலினின் சாதனைகள்

மேலும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தப்படும் எனவும், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு இலவசமாக, எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் ரேஷன் கடையில் இலங்கை தமிழர்களுக்கு இலவசமாக அரிசி அளிக்கப்படும் என கூறினார். அத்துடன் இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்படுத்தும் வகையில் முதல் 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கையோடு நிற்காமல், வரிசையாக ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க..இலவச பேருந்து முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. பெண்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு செய்த சாதனைகள் !!

சொன்னதை செய்வோம்

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் 17.17 கோடி ரூபா மதிப்பில் கடந்த 8 மாதங்களில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி, குளியலறை, பூங்கா, சமுதாய கூடம், மைதானம், சாலைகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை  தொடங்கினார். இதில் சிறப்பு என்னவென்றால், தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கி இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இலங்கை அரசுக்கு கைகொடுத்த ஸ்டாலின்

இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தது. இந்திய அரசின் அனுமதியோடு தமிழ்நாடு அரசும் எண்ணற்ற உதவிகளை இலங்கை மக்களுக்கு செய்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெரும் முயற்சியில் இலங்கைக்கு பெருமளவிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கப்பட்டன.

ஒன்றல்ல, இரண்டல்ல சாதனைகள்

இலங்கையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு மத்திய அரசின் சிறப்பு அனுமதியோடு தமிழ்நாடு அரசு செய்த உதவி இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசும் எடுக்காத முயற்சி என்றே கூறலாம். இதுவரை தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு திமுக அரசு சாதனைகளை, திமுக அரசே தோற்கடிக்கும் அளவுக்கு உதவி செய்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.

இதையும் படிங்க..தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

click me!