முதல்வர் மு.க. ஸ்டாலினின் முத்தான திட்டத்தால் மழை வெள்ளத்தில் இருந்து மீண்ட சென்னை... ஒரு பார்வை!!

By Raghupati R  |  First Published Dec 27, 2022, 8:52 AM IST

அதன்படி ஆங்காங்கே மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நடப்பு பருவத்தில் பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகளில் மழை நீ்ர் தேங்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியபோதும், மழை நீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கும் என நினைத்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 


சென்னையை பொருத்தவரை மழை என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த வடகிழக்கு பருவமழைதான் வரும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வராமல் பாதுகாக்கும். மழையால் சென்னை சாலைகளில் முழங்கால் அளவுக்கு, இடுப்பளவுக்கு எல்லாம் தண்ணீர் தேங்கும். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கினால் அது வடிய தாமதம் ஆகும்.

அதுவும், வளர்ந்து வரும் பகுதிகளில் கூட ஆங்காங்கே மேடு பள்ளம் தெரியாத அளவிற்கு மழை நீர் தேங்கும். மழைக் காலங்களில் புதிய பகுதிகளுக்கு செல்வதே ஆபத்தானதுதான். எங்கே பள்ளம் இருக்கும் என தெரியாது. கடந்த ஆண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் அடுத்த மழைக்குள் சென்னையில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Pongal Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

அதன்படி ஆங்காங்கே மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நடப்பு பருவத்தில் பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகளில் மழை நீ்ர் தேங்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியபோதும், மழை நீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கும் என நினைத்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள 70 அடி சாலையில் கடந்த முறை மழையால் சாலையே மூழ்கியது. ஆனால் இந்த முறை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டதால், கனமழை பெய்த போதிலும் தண்ணீரானது தேங்காமல் ஓடி கொண்டே இருக்கிறது. இதே போல் சென்னையின் ஓஎம்ஆர் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.  

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சென்ற ஆண்டு வெள்ளம் தேங்கியிருந்த நிலையில் இந்த ஆண்டு இரவு பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆட்சியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து, முட்டி அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையை வெள்ளமில்லாத சென்னையாக, அதாவது சிங்கார சென்னையாக மாற்றியிருக்கிறார் என்பதே மக்களின் குரலாக உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் நேரு பேசிய போது,  கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்களுக்கான இணைப்பு சரியாக வழங்கப்படவில்லை. அதனால்தான் நீர் வெளியேற்றம் சரிவர நடக்காமல் தண்ணீர் தேங்கியது. உரியக் காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். சென்னை மாநகராட்சியில் கடந்த 332 ஆண்டுகளாக மழைநீர் வடிகாலின் அளவு 2,078 கி.மீ. நீளமாக உள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் புதிதாக 1,058 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் நிரந்தர தீர்வுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்து இருந்தார். 

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பேசிய சென்னை மேயர் ப்ரியா, 'சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. ஒரு பகுதியில் 95 சதவிகித பணிகளும், மற்றொரு பகுதிகளில் 35 சதவிகித பணிகளும் நிறைவடைந்துள்ளன. கடந்தாண்டு எந்த இடங்களில் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருந்ததோ, அந்த இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், இன்னும் ஐந்து சதவிகித பணிகள் மட்டுமே இருக்கிறது. அந்தப் பணிகளும் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். வெள்ளத்தடுப்பு பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கூறி இருந்தார். 

இதையும் படிங்க;- நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ. 277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதில் முதல் மழையின்போது ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தண்ணீர் தேங்கியது. இதன் பிறகு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மழைநீர் வடிகால்களும் இணைக்கப்பட்டன. இதன் பலனாக சென்னையில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை என்று கூறப்படுகிறது.

click me!