தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் 70வது பிறந்தநாள்
திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் விஜயகாந்தை விலக்கி வைக்க முடியாது அந்தளவிற்கு இரண்டோடும் ஒன்றினைந்தவர் விஜயகாந்த், பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்கிற நோக்கில் அவரது அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கியவர், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடும் வகையில், இலவசமாக தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிகள் என பல்வேறு தரப்பினருக்கும் விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவிகளை செய்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர், விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு முக்கிய செய்தி.. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்..!
என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
மு.க.ஸ்டாலின்- இபிஎஸ் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்! என தெரிவித்துள்ளார்.
இதே போல முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். என கூறியுள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். pic.twitter.com/QPQLoKDIlV
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)
ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு... கேப்டன் வாராறு...
அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் திரு விஜயகாந்திற்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவன தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவன தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran)