தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் படிப்பதற்காக சென்றதால், சுமார் 4 மாதங்கள் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அண்ணாமலை இல்லாத நிலையில், தேசிய பாஜக சார்பாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையும் தமிழக அரசியலும்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டவர் அண்ணாமலை, அரசியல் களத்தில் தனது அதிரடி அரசியலின் மூலம் தமிழகம் முழுவதும் பாஜவை வளர்க்க பல்வேறு முயற்சிகை மேற்கொண்டார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகனுக்கு ஆகியோருக்கு அடுத்ததாக கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள் மத்தியில் பாஜகவிற்கு இடத்தை உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தவர் அண்ணாமலை. இவரது தலைமையின் கீழ் பாஜக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தாலும் பல தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்றது.
undefined
ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் நடத்தும் படிப்பில் படிப்பதற்காக நேற்று முன் தினம் நள்ளிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக சுமார் 4 மாதங்கள் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.இதனையடுத்து தமிழகத்தில் அண்ணாமலைக்கு பதிலாக புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது அதன் படி வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன், ராகவன், குஷ்பு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இந்தநிலையில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் எச்,ராஜாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாஜக சார்பாக அறிவித்துள்ள ஒருங்கிணைப்பு குழுவானது பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் சக்கரவர்த்தி, கனகசபாபதி. முருகானந்தம், ராம சீனிவாசன், சேகர் உட்பட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில மையக்குழு உடன் ஆலோசித்து கட்சிப் பணிகளை கவனிகும் வகையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று லண்டன் செல்கிறார் அண்ணாமலை.! மாநில தலைவர் பதவியில் மாற்றமா.? இல்லையா.?