
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டமானது ஆளுநரன் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக தலைமச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “வருகின்ற 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு தமிழக அரசின் உரையை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு மொத்தமாக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.