சவூதியில் தமிழக மீனவர்கள் 3 பேர் பலி - கப்பல் மோதி விபத்து

 
Published : Mar 22, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
சவூதியில் தமிழக மீனவர்கள் 3 பேர் பலி - கப்பல் மோதி விபத்து

சுருக்கம்

tamil fishermen died in saudi

சவுதியில் தங்கி மீன் பிடி தொழில் செய்த 3 பேர், நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் பலியானார்கள்.

கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நெவில், ஜார்ஜ், சுகந்தன். மீனவர்கள். இவர்கள் 3 பேரும், சவுதி அரேபியாவில், தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இன்று அதிகாலையில், மேற்கண்ட 3 பேர் உள்பட சிலர், விசைப்படகு மூலம் நடுக்கடலுக்கு சென்றனர். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கப்பல், விசைப்படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில், நிலை தடுமாறி மீனவர்கள் 3 பேரும், கடலில் விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை மீட்க, சக மீன்பிடி தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

தகவலறிந்து அந்நாட்டு மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். அதில், சுகந்தனை சடலமாக மீட்டனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!